பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

நான்கு நெறிகளைக் கொண்ட நாடு என்பதை விளக்குகிறார் கம்பர்.

அதில் - சந்தனம் இடும் புகை, அட்டில் - சமையல் இடும் புகை, ஆலை தரும் புகை - கரும்பாவைப் புகை, நான்மறை புகலும் வேள்விப் புகை.

சந்தனப் புகைதான் இன்பச்சுவை-மணம் நிரம்பியது.

சமையல் புகைதான் அறச்சுவை - விருந்தோம்பல் அறநெறியைச் சாரும்.

கரும்பாலை புகைதான் - பொருள் சேர்க்கும் தன்மையது.

வேள்விப் புகைதான் வீடு (மோட்சம்) பெற உதவும்.

கி.வா.ஜ.

| சேரமன்னன் ஒளவைக்குத்தங்கத்தால் செய்யப்பட்ட'ஆடு'ஒன்றைப் பரிசளித்தான். பரிசைப் பெற்ற ஒளவை, சேரா உன்னாடு -

| பொன்னாடு சேரா உன் ஆடு - பொன் ஆடு என்றாள். மன்னன்

மகிழ்ந்தான்.

சிறைச்சாலை பல நல்ல நூல்கள் பிறந்த மூல இடமாக இருந்து வருகிறது. சிறைச்சாலை பல நூல்களைத் தந்திருக்கிறது. ஆனால் சிறையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் எது? யாரால் எழுதப்பட்டது? விடை: சிறையில் எழுதப்பட்ட முதல் நூல் திருமுருகாற்றுப்படை எழுதியவர்.நக்கீரர்