பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அளித்தார் என்று பாராட்டுவார்கள். நாலாவது $3 வையும் வழங்கியிருக்கிறார். அவர்தாம் கருணாநிதி."

சின்னப்பா தேவர்

கலைவாணர் அரங்கில் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. சின்னப்பா தேவர் பொன்னாடை போர்த்தினார். வேறு பலரும் பேசினார்கள். கி.வா.ஜ.வும் பேசினார். "சின்னப்பா தேவர் சொல்கிறார்" என்று தொடங்கினார். எல்லாரும் ஆவலாக என்ன சொல்கிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். "மிகவும் சின்னப்பா, குறள். அதைப் பாடியவர் திருவள்ளுவ தேவர். அந்தச் சின்னப்பா பாடிய தேவராகிய சின்னப்பா தேவர் கருணாநிதியைப் பற்றிச் சொல்கிறார். கருணாநிதி என்பதற்குச் சரியான தமிழ், அருட்செல்வம். 'அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் என்று சொல்கிறார். நாம் பெறும் செல்வங்களிலெல்லாம் கருணாநிதிதான் பெரிய செல்வம் என்கிறார்" என்று இவர் விளக்கினார்.

சவுக்கடி

காட்டுப்பள்ளியில் ஆசாரிய சுவாமிகள் எழுந்தருளி யிருந்தார்கள். சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாயில் போட்டில் அந்த ஊருக்குப் போக வேண்டும். கடற்கரையில் இருக்கிறது அந்த ஊர். தனியே சாலை இல்லை. மணலில் ஜீப்பில் போகலாம். மணற்பரப்பில் சவுக்குச் செடிகள் இருக்கின்றன.

இவர் போட்டுக்காரனிடம் போக வரப் பேசிக் கொண்டு காட்டுப் பள்ளி சென்றார். சுவாமிகள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால் சிறிது