சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 14
பெயருக்கு நல்ல அர்த்தம் சொல்ல முடியாதா என் நான் ஏங்குகிறேன்." -
"இன்று சொற்பொழிவில் விளக்குகிறேன்" என்றார் இவர். அப்படியே சொற்பொழிவைத் தொடங்கும் போது, "இந்த ஊரில் எப்போதும் மங்கலம் நீண்டு வாழும், நீடு ஆம் மங்கலம் உடைய ஊர் இது" என்று விளக்கினார்.
என் கால்
அந்தப் பையன் னகரத்தை னகரமாகவும், னகரத்தை ணகர மாகவும் உச்சரிப்பான். மன்னனை மண்ணன் என்பான்; விண்ணவரை வின்னவர் என்பான். அவன் கால் வாய்பாடு, அரை வாய்பாடு
ான் நால் இரண்டு!
சொல்லிக் கொண்டிருந்தான். "எண் கால் இரண்டு" என்று சொல்ல வேண்டியவன், "என் கால் ரெண்டு என்று தவறாக உச்சரித்துச் சொன்னான். அவன் தந்தை, "முட்டாள்! சரியாகச் சொல்லடா!" என்றார்.
- "ஏன் கோபிக்கிறீர்கள்? அவன் சரியாகத்தானே சொல்கிறான்?" என்று அருகில் இருந்த இவர் கேட்டார்.
"ணவுக்கும் னவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்கிறானே!" என்ற்ார் தந்தை. அவன் கால் இரண்டு;