பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அதைத்தான் என் கால் ரெண்டு என்று செர்ல்கிறான். அதில் என்ன தவறு?" என்று திருப்பிக் கேட்டார் இவர்.

மானம் கெட்ட தயிர்

மானம் இா சிவகாசிக்குச் சென்றிருந்த

தயிர். போது வழக்கமாகத் தங்கும் இடத்தில் இவருக்கு விருந்துணவு வழங்கினார்கள். இவர் வருவதை அறிந்து நன்றாகக் காய்ச்சிய பாலில் பிரை குத்தி வைத்திருந்தார்கள். தயிர் ஒரே கட்டியாக இருந்தது. கால் அங்குலம் ஆடையுடன் இருந்தது. * பிசைந்தவுடனே கையில் வெண்ணெய்ப் பிசுக்கு உண்டாயிற்று. அதை உண்ட இவர் எப்படிப் பாராட்டுவது என்று தெரியாமல் சில கணம் இருந்தார். பிறகு, "நானும் சென்னையிலும் தயிர் உண்ணுகிறேன். ஆனால், அது மானங்கெட்ட தயிர்' என்றார்.

அன்பர்கள் சற்றே யோசித்தபோது, "ஆடை இல்லாத மனிதன் மானங்கெட்டவன். எங்கள் வீட்டுத் தயிரும் அத்தகையதுதான்" என்று விளக்கினார்.

காலி வீடு

அந்த வீதியில் ஒரு வீட்டில் குடியிருந்தவர் வேறு வீட்டுக்குப் போய் விட்டார். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு பெரிய மனிதர்; சிவபக்தர். எதிர் வீட்டில் இருந்த அன்பரைப் பார்க்கச் சென்றிருந்த இவர், "அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?" என்று