பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 18

ஏடு

ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்த இவரைச் சாப்பிட்டு விட்டுப் போகும்படி வற்புறுத்தினார்கள். இவர் பந்தியில் அமர்ந்தார். இலை போட்டபொழுது இவருக்கு ஏட்டை ஒருவர் போட்டார். கல்யாணத்தில் முக்கிய உறவினராக இருந்த ஒருவர், "அவருக்கு ஏடு வேண்டாம். நுனியிலை போடுங்கள்" என்றார். "வ்ேண்டாம். ஏட்டுக்கும் தமிழுக்கும் உறவு அதிகம். எங்கள் ஆசிரியருக்கு ஏடு என்றால் மிகவும் பிரியம், இதுவே இருக்கட்டும்" என்று சொல்லி இவர் அதிலே உணவு கொண்டார். (ஏடு - பனையோலை, வாழையிலை).

அமைச்சரும் நிருபரும்

அமைச்சர் ஒருவர் பேச வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் வந்ததனால் பல பத்திரிகை திருபர்கள் வந்திருந்தார்கள். முக்கியமான செய்திகளை அவர் சொல்வார் என்று எண்ணி வந்து உரிய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அமைச்சர் பேசத் தொடங்குவதற்கு முன், "நிருபர் வந்திருக்கிறாரா?" என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த இவர், "அமைச்சருக்குத்தான் அரசரின்மேல் எவ்வளவு அக்க ரை?" என்றார். அருகில் இருந்த நண்பர், அரசரா? இங்கே அரசர் யார்!" என்று கேட்டார். ஆமாம், அவர் நிருபர் வந்திருக்கிறாரா என்று கேட்கவில்லையா? திருபர் என்பது அரசர்

அல்லவா?" என்று இவர் விளக்கினார்.