பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 26

இருந்தீர்கள். இப்போது வீடு கட்டிக் கொண்டீர்கள்" என்றார். -

கட்டி வருமா ?

இவருடைய நண்பர் ஒருவருக்குக் குழந்தைகள் அதிகம். ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். குழந்தைகள் இருவருக்கும் முகத்திலும் உடம்பிலும் உஷ்ணத்தால் கட்டி வந்திருந்தது. "பையன்களுக்குப் பாலும் கீரையும் பழமும் வாங்கிக் கொடுங்கள், உஷ்ணம் தணியும்" என்றார். இவர். "அதற்கெல்லாம் எங்கே போவது ? எனக்குக் கிடைக்கும் சம்பளத்துக்குப் பால் வாங்கிக் கொடுத்தால் கட்டி வருமா?" என்று அவர் குறைந்து கொண்டார். இவர் உடனே "நானும் அதைத்தான் சொல்கிறேன்; பால் வாங்கிக் கொடுத்தால் இப்படிக் கட்டி வருமா என்கிறேன்" என்றார்.

முந்திரிப் பழம்

வேலூரில் பேசப் போயிருந்தபோது இவருக்கு அன்பர் ஒருவர் திராட்சைப் பழம் வாங்கி வந்து கொடுத்தார். "உங்களுக்குப் பலாப்பழம் பிடிக்கும் என்று சொன்னார்கள். ஒரு பழம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று எண்ணி வந்தேன். கிடைக்கவில்லை என்றார். "பரவாயில்லை. அந்த முழுப்பழம் வேண்டாம். இந்த முந்திரிப் பழமே போதும் என்று இவர் சொன்னவுடன் அவர் புன்னகை பூத்தார்.

- மலைப்பழம்

ஒர் அன்பர் வீட்டுக்கு இவர் சென்றிருந்தார். அப்போது இவருக்கு ஏதாவது தரவேண்டுமென்று எண்ணிய வீட்டுக்காரர், உள்ளே என்ன