சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 38
கொண்டுபோய் விடுகிறேன்" என்றான் வண்டிக்காரன். வண்டியில் ஏறிப் போனார்கள், வழிநெடுகக் குண்டும் குழியுமாக இருந்தது. "என்னப்பா இது? ரோடு மோசமாக இருக்கிறதே!" என்று உடன் வந்த நண்பர் கேட்டார். "அவன்தான் நொடியில் விடுகிறேன்' என்று சொன்னானே சொன்னபடி செய்கிறான்' என்று இவர் பதில் சொன்னார்.
சத்தம் அதிகம்
ஒரு சமயம் டில்லிக்கு இவர் போய்க் கொண்டிருந்தார். எக்ஸ்பிரஸ் வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது, அதிகமாக இரைச்சலாக இருந்தது. உடன் இருந்த நண்பர், "பேசவே முடியவில்லை. சத்தம் அதிகமாக இருக்கிறது" என்றார். "ஆமாம், இந்த வண்டிக்குச் சத்தம் அதிகந்தானே?" என்றார் இவர்.
(சத்தம் - ஒலி, வண்டிக் கூலி,
ஒரு பையன்
காஞ்சிபுரத்துக்கு ஒரு காரில் சில நண்பர் களுடன் இவர் பயண மானார். ஆசாரியசுவாமி களைத் தரிசிப்பதற்காகப் போனார்கள். காருக் குடையவர், "அதிகமாகச் - சாமான்களைக் கொண்டு வராதீர்கள்; வண்டியில் ஜனத்தொகை அதிகம்" என்று