பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

எச்சரித்தார். இவர் ஒரு சிறிய பை மாத்திரம் வைத்திருந்தார். "நான் ஒரு பையன்; இடம் இருக்கும் அல்லவா?" என்று கேட்டார்.

(ஒரு பையன் ஒரு சிறுவன், ஒரு பையை உடையவன்.)

தங்க வீடு

எந்த ஊருக்குப் போனாலும் குறிப்பிட்ட ஒரு வீட்டில்தான் இவர் தங்குவார். காலையில் எழுந்து நீராடி ஜபம், தியானம் செய்வதற்கும், பல நண்பர்கள் வந்து பார்த்துப் போவதற்கும் வசதியாக இருப்பதற்காக, வெவ்வேறு இடமாக இருந்தால் சங்கடமாக இருக்குமென்று, ஒரே இடத்தில் தங்குவார். ஈரோட்டில் அட்வகேட் சேவுையர் வீட்டில் தங்கியிருந்தார். இவரைப் பார்க்க அயலுர்ரிலிருந்து ஒரு நண்பர் வந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். "மறுபடியும் அடுத்த மாதம் இங்கே வருவேன், அப்போதும் பார்க்கலாம்" என்று இவர் சொன்னார். "அப்போது எங்கே தங்குவீர்கள்?" என்று வந்தவர் கேட்டார். இவர் சொன்ன விடை: "நான் எப்போதும் இங்கேதான் தங்குவேன். மற்ற வீடுகளெல்லாம் செங்கல் வீடு. இது எனக்கு எப்போதும் தங்க வீடு." -

தொண்டை அடைத்தது

ஒருருக்குப் பேசச் சென்றபோது இவருடைய தொண்டை கட்டியிருந்தது. பேச வரவில்லை. பிறகு ஒரு முறை வந்து பேசினார். அப்போது முன்முறை வந்தும் பேச முடியாமல் போனதை இவர் குறிப்பிட்ட விதம்: "சென்ற முறை இங்கே வந்தபோது தொண்டை.