பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அங்கலாய்த்தார்கள். "பெருங்குடிமக்கள் அல்லவா?" என்று கேட்டார். இவர்.

இன்னுமா பெருக்க வேண்டும்?

இவர் திருவேட்டீசுவரன் பேட்டையில் குடியிருந்தபோது இவர் வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள். அவள் கொஞ்சம் பருமனாக இருந்தாள். "உனக்குச் சரியாகத் தான் பெயர் வைத்திருக் கிறார்கள்' என்று இவர் பரிகாசம் செய்வார். ஒரு நாள் ஒர் அன்பருடன் இவர் சுவாரசியமாகக் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தைப் பெருக்குவதற்காக விசாலம் நின்றுகொண்டிருந்தாள். பேச்சுச் சுவாரசியத்தில் இவர் அதைக் கவனிக்கவில்லை. "என்ன இது? விசாலம் பெருக்க வேண்டும். நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!" என்று இவர் மனைவி சொன்னாள். இவர், "விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?" என்பதைக் கேட்டு, அந்த விசாலமே பக்கென்று சிரித்துவிட்டாள்.

அடடா!

எதிர்பாராத விதமாக வேறு ஊரில் இருந்த அந்த அன்பர் வீட்டுக்கு இவர் போனார். அவர் மிகவும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, "அடடா! எப்போது வந்தது? பார்த்துப் பல் காலம் ஆயிற்றே" என்றார்.