சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - - 34
"அதனால்தான் மரியாதை இல்லாமல் வரவேற் கிறீர்களோ?" என்று இவர் கூறக் கேட்டு அன்பர் விழித்தார். "அட போட்டுப் பேசுகிறீர்களே! நியாயமா?" என்றபோதுதான் சிலேடை புரிந்தது.
டாக்டர்
மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாத ஐயரவர் களுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். ஒரு நாள் ஐயரவர்கள் - அதைப்பற்றிப் பேசும்போது, "எனக்கு வைத்தியம் தெரியுமா? மருந்து தெரியுமா? எனக்குப் போப் டாக்டர் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள்" என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். அருகில் இருந்த இவர், "நீங்கள் பெரிய பண்டிதர் அல்லவா?" என்று கேட்டார். (பண்டிதர் - வைத்தியர், புலவர்.) -
சருவமுமா? -
ஒர் ஊரில் இவருக்கு அன்பர் ஒரு சருவத்தில் வெந்நீர்
வைத்துக் கொடுத்து நீராடச் சொன்னார். வெந்நீர்ப் பாத்திரத்தை இறக்கி வைத்து, "குளியுங்கள்" என்றார்
அன்பர், "இந்த வெந்நீர் முழுவதும் உங்களுக்கே" என்றார். -
"சருவமும் எனக்கா?" என்று இவர் கேட்டவுடன் அன்பருக்கு நயம் புலப்படவில்லை. ஒரு நிமிஷம் கழித்து,"சருவத்தை வைத்துவிடுங்கள்" என்றார் அன்பர்.
(சருவம் - எல்லாம், சிறிய தவலை.)