பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 - சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

வழுக்கை

ஒரு நாள் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இவர், "தென்ன மரத்துக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்" என்றார். "எப்படி?" என்று ஒருவர் கேட்டார். "தென்ன மரத்தில் தேங்காயில் இளமையில் வழுக்கை இருக்கிறது. மனிதனுக்கு முதுமையில்தான் வழுக்கை வருகிறது" என்று அதை எடுத்துக் காட்டினார்.

(வழுக்கை - இளந்தேங்காய், தலையில் விழும் வழுக்கை)

பலவின் பழம்

ஒர் அன்பர் இவரைப் பேச அழைத்திருந்தார். "பிற்பகலில் நல்ல பழங்கள் இருந்தால் உண்ணலாம்" என்று இவர் சொன்னார். அப்போது அங்கே வேறு பழங்கள் கிடைக்கவில்லை. பலாச்சுளை மட்டும் கிடைத்தது. அதை அன்பர் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்."மலைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு ஒன்றும் இந்த அத்துவான ஊரிலே கிடைப்பதில்லை. இதுதான் கிடைத்தது" என்று மிகவும் வருத்தத்தோடு தந்தார் அவர். இவர் சிரித்துக்கொண்டே, "இது ஒரு பழமா? பலவின் பழம் அல்லவா?" என்றார். உண்மையில் பலாப்பழம் இவருக்குப் பிடித்த பழம்.

(பலவின் பழம் - பல இன் பழம், பலாப் பழம்)