உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.37 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

- இலையில் உட்கார்தல்

காங்கேயநல்லூரில் முருகன் திருக்கோயிலுக்கு மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்தார் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். அவருடைய சொந்த ஊர் அது. பெரிய கூட்டம் வந்திருந்தது. இவரைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். திறந்த வெளியில் கொட்டகை போட்டு அங்கே உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். பூமியை நிரவித் தண்ணிர் தெளித்துத் திமிகக் கட்டை போட்டிருந்தார்கள். அங்கே இலை போட்டார்கள். கீழே ஈரமாக இருந்தது. அத்தனை பேருக்கும் பலகையோ, பாயோ போட முடியுமா? இலை மலையாக் வந்து குவிந்திருந்தது. "இலையையே ஆசனமாகப் போடுங்கள். உட்கார்ந்து சாப்பிடட்டும்" என்றார் வாரியார். அப்படியே போட்டார்கள்.

இவரை உண்ண அழைத்தார்கள். "எவ்வளவோ இடங்களில் என்னைச் சாப்பிட அழைத்ததுண்டு. அங்கெல்லாம் அழைத்தவர்கள் சொன்னபடி கேட்கப் வில்லை. இப்போதுதான் நீங்கள் சொன்னபடி கேட்கப் போகிறேன்" என்றார். இவர். "என்ன அது?" என்று ஒர் அன்பர் கேட்டார். "எங்கே என்னைச் சாப்பிட அழைத்தாலும் இலையில் உட்காரலாம், வாருங்கள் என்று அழைப்பார்கள். நான் இலைக்குப் பக்கத்தில்தான். உட்காருவேன். ஆனால் இங்கே நீங்கள் சொன்னபடி இலையிலேயே உட்காரப் போகிறேன்" என்றார். இவர்.