பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 44

காயம்

இவர் சொற்பொழிவில் கூறியது:

நாமும் பிறக்கிறோம்; இறைவனும் அவதாரம் செய்கிறான். இருவர் பிறப்பும் ஒன்றாகா. நாம் நம் கர்ம வசத்தினால் பிறக்கிறோம். நம் விருப்பப்படி பிறக்க இயலாது. இறைவன் கருணையினால் அவதாரம் செய்கிறான். எங்கே எப்படித் தோன்ற வேண்டுமோ, அப்படித் தோன்றுகிறான். மலையிலிருந்து உருட்டிய தனால் ஒருவன் கீழே வருகிறான். மற்றொருவன் படிப்படியாக இறங்கி வருகிறான். முன்னவனைப்போல் நாம் பிறக்கிறோம். பின்னவனைப்போல இறைவன் வருகிறான். மேலேயிருந்து உருட்டி விட்டால் காயம் உண்டாகும் அல்லவா? நமக்கு இந்தக் காயம் ஊழ்வினை உருட்டி விட்டதால் வந்தது. (காயம் - உடம்பு, புண்).

முன்வந்தேன்

ஒர் ஆண்டு விழாவில் பலர் பேச இருந்தார்கள். இவருடைய சொற்பொழிவை இறுதியில் அமைத்திருந்தார்கள். அவசர மாகப் போக வேண்டியிருந்தமை யால் முதலிலேயே பேசிவிட்டுப் போகிறேன் என்று சொன்னார் இவர். அப்படியே பேசினார். "நான் இங்கே பேச முன் வந்திருக்கிறேன். எல்லாரும் பேச முன் வந்தவர்களே. ஆனாலும் நான் வேறிடத்துக்குப் போக வேண்டியிருப்பதால்