சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ £8
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்தார்! கம்மாவா பணம் வரும்? காசா? லேசா?" என்றார். அவரைப் பரிகாசம் செய்கிறவர், "அப்பொழுதே சொன்னேன்: வயிற்றுக்கு வஞ்சம் பண்ணிப் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்டேன். அந்த மனிதன் கேட்கவில்லை. இப்போது என்ன ஆயிற்று? அத்தழ் பணமே அவன் உயிரை வாங்கி விட்டது. காசாலேசா ! இதுதான் அவன் விதி' என்றார். காசாலே சா என்ற நான்கு எழுத்துக்களில் முதல் இரண்டை ஒன்றாகவும் பின் இரண்டை ஒன்றாகவும் சேர்த்துச் சொன்னால் (காசா லேசா) புகழ்ச்சியாக இருக்கிறது. முன் மூன்றையும் சேர்த்தும் நாலாவதைத் தனித்தும் வைத்துச் சொன்னால் (காசாலே சா) இகழ்ச்சியாக மாறுகிறது. இது ஒருவகைச் சொல் இன்பம்.
வரம்பு இல்லை
இவருக்கு ஒரன்பர் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தார். இவர் சீப்பிச் சாப்பிடுவதை விரும்புவ தில்லை. துரக்கிச் சாப்பிட்டால் பால் மேலே சிந்தும். "பரவாயில்லை; உறிஞ்சிக் குடியுங்கள். துரக்கிக் குடித்தால் சிந்தும். தம்ளராக இருந்தால் விளிம்பு இருக்கும்; இதற்கு இல்லை" என்றார் அன்பர். -
"விளிம்பு என்று சொல்லாதீர்கள்; வரம்பு என்று சொல்லுங்கள். வரம்பு இல்லாவிட்டால் எப்போதும் தொல்லைதான்" என்றார். இவர்.
வறட்டுமா ?
நெடு நேரம் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் புறப்பட்டபோது, "வறட்டுமா?" என்று ரகரத்தை