பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து அரசியல் வரை இன்று ஏராளமான வேடிக்கைகள் நிகழ்கின்றன. காலையில் ஆபீசுக்கு பஸ்ஸை பிடிக்க அவசரமாக ஒருவர் ஓடி வருகிறார். ஆனால் அவர் வருவதற்குள் பஸ் சென்று விடுகிறது. ஒடி வந்தவருக்கு மன வேதனை: ஆனால் அதை பார்ப்பவர்களுக்கு வேடிக்கை. இதை நேரடியாக இப்படிச் சொன்னால் இதில் ஹாஸ்யம் இல்லை. ஆனால் அதையே, ஒருவர் மூச்சு இறைக்க இறைக்க கையில் பையுடன் ஒடி வந்தார். வரும் போது அவர் மதியம் உணவிற்காக பையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் சாய்ந்து விட்டது. அதையும் அவர் கவனிக்க வில்லை. அவர் சட்டைப் பையில் வைத்திருந்த சில்லறைகள் எல்லாம் சிதறுகின்றது. பஸ்ஸில் சில்லரை கொடுக்காவிட்டால் கீழே இறக்கி விடுவானோ? ஆபிஸுக்கு நேரத்தில் செல்ல வேண்டுமே சிதறிய சில்லறையை கையில் எடுத்துக் கொண்டு அவசரமாக ஒடி வருகிறார். ஒரு கையில் சில்லரை, மறு கையில் பை அந்த நேரத்திலும் பஸ்ஸில் ஏற வேண்டும் என்ற அவரது அவசரம்! ஆனால் அவர் அருகில் ஒடி வரும் போது கண்டக்டர் விஸில் கொடுத்து விடுகிறார். வந்தவருக்கு ஏமாற்றம்! இப்படி பல வருணனைகளுடன் சொல்லும் போது அதில் ஒரு ஹாஸ்யம் இருக்கிறது. இப்படித் தான் எஸ்.வி.வி., தேவன் போன்ற ஹாஸ்ய எழுத்தாளர்கள் எழுதினார்கள்.

கி.வா.ஜ. அவர்கள் எப்போதும் நண்பர்களுடனோ, மேடையிலோ பேசும் போது இப்படிப்பட்ட ஏராளமான, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் இரு பொருள்பட பல துணுக்குகளைச் சொல்லியதுண்டு.