பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 56

விட்டுச் சொற்பொழிவாற்றினார். பின்னுரையில் இவர், "இந்தப் புலவர் தம்மை அருகர் அல்லர் என்று சொன்னார். அது சரி, சைவரை அருகர் என்று சொல்லலாமா?" என்றார். (அருகர் - தகுதியுடையார், சைனர்.)

குவளையும் தண்ணிரும்

எழுத்தாளர் திரு. அகிலனுடைய மகள் ஒருத்திக்குத் திருச்சிராப்பள்ளியில் திருமணம் நிகழ்ந்தது. அதற்கு இவர் போயிருந்தார். திருமண நிகழ்ச்சிக்குப் பின் யாவருக்கும் விருந்து வழங்கினர். எல்லாரும் சாப்பிட்ட பிறகு கை அலம்பப் போயினர். தொட்டியில் தண்ணிர் நிரப்பியிருந்தனர். தகரக் குவளையில் தண்ணிர் எடுத்துக் கொடுத்தார்கள். இவர் ஒரு குவளையில் தண்ணிர் வாங்கிக் கை கழுவிக்கொண்டே சொன்னார். "தண்ணீரில்தான் குவளை இருக்கும். இங்கே குவளையில் தண்ணிர் இருக்கிறது." (குவளைதகரக் குவளை, குவளை என்ற மலர்". - -

கேசரியும் வாரணமும்

மன்னார்குடியில் ஒரு சபையில் சொற்பொழி வாற்றப் போயிருந்தார் இவர். வேறு புலவர்களும் வந்திருந்தார்கள். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தி லிருந்து திரு. க. வெள்ளை வாரணனாரும் வந்திருந்தார். பிற்பகலில் எல்லாருக்கும் சிற்றுண்டி வழங்கினார்கள். இனிப்பும் காரமும் தந்தார் கள். கேசரி பரிமாறி