பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

னார்கள். திரு வெள்ளைவாரணனார், - " எனக்குத் தடிமனாக இருக்கிறது. கேசரி வேண்டாம் " என்றார். அன்பர்கள் வற்புறுத்தினார்கள். அவர் மறுத்தார். இவர், "கேசரியைக் கண்டு வாரனம் அஞ்சுகிறது இயல்புதானே? இது உங்களுக்குத் தெரியவில்லையே!" என்றார். (கேசரி - ரவா - கேசரி, சிங்கம்; வாரனம். வெள்ளை வாரணார், யானை).

கோட்டையை விட்டார்

திருச்சியை, அந்தப் பக்கத்திலுள்ளவர்கள் கோட்டை என்று சொல்வார்கள். "கோட்டைக்குப் போய் வந்தேன். என் பையன் கோட்டையில் வேலையாக இருக்கிறான்" என்பார்கள். இவருடைய உறவினர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். ஒரு நாள் உறவினர்களில் ஒருவர், "நான் இப்போது திருச்சியில் இல்லை. ஊருக்கே வந்துவிட்டேன். இங்கே அங்கிருந்த வசதி இல்லை" என்றார். "ஆமாம், கோட்டையை விட்டு விட்டால் சங்கடந்தான்" என்றார் இவர். - -

கும்பத்தில் பிறந்தவன்

மிகச் சிறிய பிராயத்தில், 12ஆம் வயசிலே இவர் கவி பாடுவார். வகுப்பில் இவர்தாம் மிகச் சிறியவர். உடற் பயிற்சி வகுப்பில் கடைசி மாணவர் இவர். இவருடன் படித்த மாணாக்கன் ஒருவன்,"நீ குள்ளமாக இருக்கிறாய். தமிழில் கெட்டிக்காரனாக இருக்கிறாய். உன்னை அகத்தியன் என்று சொல்லத் தோன்றுகிறது" என்றான். உடனே இவர், "நானும் கும்பத்தில் உதித்தவன்தான்" என்றார். (கும்பம் - கலசம், கும்ப லக்கினம்.