பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 58

எழுத்தாளரான பிறகு 'கும்பன் என்ற புனைபெயரோடு சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.)

கண்ணும் மையும்

கலைமகள் காரியாலயத்தில் அச்சுக் கோப்பவர் "புரூஃப்” கொண்டு வந்தார். அதில் அவர் கையிலிருந்த மை பல இடங்களில் பட்டிருந்தது. அருகில் இருந்த துணையாசிரியர், "என்னப்பா, இப்படி மையைத் தடவிக்

கொண்டு வருகிறாய்?" என்று கேட்டார். கலைமகள் ஆசிரியர், "கண்னைப் போல எண்ணிச்

செய்திருக்கிறார். இதனிடம் எவ்வளவு மதிப்பு!" என்றார்.

காலாடி

இவருடைய நண்பர் ஒருவர் எதையாவது சுவாரசியமாக எழுதினாலும் படித்தாலும் தம் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார். அதைக் கவனித்த இவர் அவரிடம், "நான் சொல்வதைக் கேட்டு கோபம் அடையாமல் இருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன்" என்றார். அவர் "என்ன?" என்று கேட்டார். "ஒரு நண்பர் உங்களைப் பற்றிச் சொன்னார். உங்களைக் காலாடி என்றார். அதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போது அவர் சொன்னது உண்மை என்று தெரிகிறது" என்றார். "என்ன சொல்கிறீர்கள்?" என்று நிமிர்ந்து கேட்டார் அந்த நண்பர். "நீங்கள் சதா காலை ஆட்டுவதைக் கண்டேன். அவர் சொல்வது சரிதான் என்று பட்டது" என்றார்

இவர்.