பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ . 60

இல்லாவிட்டால் தானே கொப்பரை என்ற பெயர் நிலைக்கும்?" என்றார்.

(கொப்பரை-ஒரு பாத்திரம், தேங்காய்க் கொப்பரை.)

திருமுகம்

தமக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதும் வழக்கத்தை உடையவர் இவர். தம் நண்பர்களிடமும் அப்படிச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார். ஒரு நாள் தம் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றிச்சொல்லும்போது கூறினார்: "ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார். அவர் முகத்தைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுகிறோம். கேட்டதற்கு விடை சொல்கிறோம். முகம் கண்டால் செய்யும் மரியாதை அது. அதுவே பண்பாடு. அவர் திருமுகமாகிய கடிதத்தைக் கண்டாலும் உடனே பதில் எழுத வேண்டும். அதுதான் முறை. முகமானாலும் கடிதமானாலும் இரண்டும் திருமுகங்களே. இரண்டையும் ஒரு மாதிரியே பார்த்து மரியாதை செய்ய வேண்டும்."

பொங்கி வரும்.

அந்த விட்டிற்கு இவர் போகும்போது வீட்டுக்காரர் கடுகடுவென்றிருந்தார். உள்ளே அவர் மனைவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இவர், "என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். "அவளையே கேளுங்கள்" என்றார், அந்த நண்பர். அந்தப் பெண்மணியைக் கேட்டார். "ஆமாம், இவருக்கு முணுக்கென்றால் மூக்கின்மேல் கோபம். 9 மணிக்கு எங்கேயோ போக வேண்டுமாம். அதை முன்னாலே