பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 சிரிக்க வைக்கிறார். கி.வா.ஜ.

சொல்லக் கூடாது? சிறிது நேரத்துக்கு முன்தான் சொன்னார். இப்போதுதான் அடுப்பில் உலை வைத்தேன். சாதம் பொங்கித்தானே ஆக வேண்டும்?" என்றாள். "ஒகோ! சாதம் பொங்கி வரவில்லை. அதனால் இவருக்குக் கோபம் பொங்கி வருகிறதாக்கும்" என்று இவர் கூறவே, கணவன் மனைவி இருவரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

நெருக்கமும் உருக்கமும்

நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இவர் சொன்னது: காரில் நாம் நெருங்கி உட்காருகிறோம். மனம் பொருந்தியவர்கள் நெருங்கினால் நெருக்கம்; அல்லாதவர்கள் நெருங்கினால் நெருக்கடி, உருக்கம், புழுக்கம் இரண்டும் ஒன்றே; வெப்பத்தால் உண்டாகும். ஆனால் கோயிலில் இருக்கும் போது வெப்பம் மிகுந்தால் உருக்கமாக இருக்கும். வேண்டாதவரிடையில் அப்படி இருந்தால் புழுக்கமாக இருக்கும். -

பின்பற்றுகிறவள்

t

அவர் ஸ்கூட்டர் வாங்கி யிருந்தார் வெளியில் போகும் போது தம் பின் னாலே தம் மனைவி யையும் அமரச் செய்து அழைத்துக் கொண்டு போவார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு இவர்