பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை பெரும்பாலும் பல பத்திரிகைகளிலும் வெளி வந்ததுண்டு. இவற்றை சிலேடை என்பார்கள். ஆனால் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் இவை சிரிப்பை வரவழைக்கக் கூடியவை தான். இந்த ஆற்றல் கி.வா.ஜ. அவர்களிடம் நிரம்பி இருந்தது. அவர் ஒரு ஆசு கவி.

இவற்றை பெரும்பாலும் கி.வா.ஜ. அவர்களின் மருமகன் திரு. இராம சுப்ரமணியம் அவர்கள் தொகுத்தார்கள். பின்பு அல்லயன்ஸ் சீனிவாசன், கி.வா.ஜ. வின் விசிறிகளை சந்தித்த போது சிலவற்றை தொகுத்தார். மேலும் திரு.சங்கரிபுத்திரன் அவர்கள் தொகுத்ததையும் சேர்த்துக் கொண்டு உங்களுக்கு இதை ஒரு புத்தக வடிவில் கொடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

சில துணுக்குகளுக்கு, உடல்நிலை சரியாக இல்லாத நேரத்திலும், கி.வா.ஜ.வுக்கு செய்யும் தொண்டு என்று, சித்திரம் வரைந்து கொடுத்த ஓவியர் சாரதி அவர்களுக்கும் நன்றி!

வாசகர்களை என்றென்றும் சிரிப்பில் ஆழ்த்த வேண்டும் என்று கி.வா.ஜ. அவர்களின் துணுக்குகளை தொகுத்த இராம சப்ரமணியம், சங்கரிபுத்திரன் ஆகியோருக்கும் எங்களுடைய நன்றி.

- பதிப்பகத்தார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அன்பர்கள் இதில் வராத இவரது துணுக்குகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள். அவற்றையும் அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்கிறோம். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்.