பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இவர், "கன்னங்கறேலென்று.." என்று சொல்லிச் சிறிது நிறுத்தினார். பையன் முகத்தில் அசடு வழிந்தது. "....கூத்தலையுடைய அழகிய பெண் உனக்குக் கிடைக்கட்டும் என்று வாக்கியத்தை முடித்தார்.

அப்பால்

ஒரு கல்லூரியில் பேச் அழைத்திருந்தார்கள். பேசுவதற்கு முன் காபி அளித்தனர். இவர் காபி பருகுவதில்லை. "காபி வேண்டாம்; பால் கொடுங்கள்" என்றார். அங்கே பால் இல்லை. "சற்று இருங்கள்; பால் வாங்கிவரச் சொல்கிறேன்" என்றார் கல்லூரி முதல்வர். "அதற்காகக் காத்திருக்க வேண்டாம். பேசப் போகலாம். அப்ப பால் வரட்டும்; அப்பால் உண்ணலாம்" என்று - சொல்லி இவர் எழுந்தார்.

இப்படி

மேடையின் மேல் ஏறிப் பேச வேண்டும். மேடை சற்றே உயரமாக இருந்தது. அதன் மறுபக்கத்தில் படி இருந்தது. இந்தப் பக்கத்தில் இவர் இருந்தபடியால் படி கண்ணுக்குத் தெரியவில்லை. எப்படி மேடைமேல் ஏறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இவர். அதை உணர்ந்த செயலாளர், "இப்படி வந்து ஏறுங்கள்" என்று படியைக் காட்டினார். "இப்படி என்று தெரியவில்லை. இப்போது இப்படி ஏறுகிறேன்" என்று சொல்லிப் படி ஏறி மேடைக்குப் போனார்.