சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ68
உடையவர் சொன்னார். ஏன்? நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். இவர்.
(தள்ளாதவன் தள்ளுவதைச் செய்யாதவன், தளர்ந்தவன்).
பிஞ்சு விட்டது
இவரைப் பார்க்கச் சில நண்பர்கள் வந்தார்கள். இவர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந் தார்கள். அப்போது ஒரு நண்பர் அங்கே போட்டிருந்த சோபாவைப் பார்த்தார். அது பிய்ந்திருந்தது. அதை அவர் கவனிப்பதை அறிந்த இவர், "என்ன பார்க்கிறீாகள்? உயிருள்ள மரம் நாளானால் பழம் தருகிறது. இந்தப் சோபா நாளானால் பிஞ்சு விடுகிறது" என்றார். (பிஞ்சு - இளங்காய், பிய்ந்து).
தபாலாபீஸ்
இவர் தம் இளமைக் காலத்தில் சேந்தமங்கலத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தார். அப்போது - திம்மப்பையர் என்பவர் போஸ்ட்மாஸ்டராக இருந்தார். அவர் ஐயர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் மாத்துவராயர். இவருடைய நண்பர் ஒருவர் இவரைப் பார்க்க வந்தார். தபாலாபீஸ் போய்விட்டு வந்தார்கள் இருவரும். "இவர் பெயர் திம்மப்பையர் நல்ல ரசிகர்" என்று இவர் அறிமுகப்படுத்தினார். அங்கிருந்து வந்தவுடன் நண்பர்,"இவரை ஐயர் என்கிறாய், முத்திரை போட்டுக்கொள்கிறாரே ராயரா?" என்றார். "ஆமாம்;