பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

தபாலாபீஸில் இருப்பவர் முத்திரை போடுவது பொருத்தந்தானே?" என்றார் இவர்.

மெல்ல - மென்று

இவருடைய வீட்டுக்கு வெளியூர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். தம்முடன் அவரைச் சாப்பிடச் சொன்னார். அவர் அப்படியே சாப்பிட உட்கார்ந்தார். "அவசரம் இல்லை. நிதானமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் தமிழ்ப் புலவர். மெல்லச் சாப்பிடுங்கள்; மென்று சாப்பிடுங்கள்" என்று இவர் உபசரித்தார்.

பார்த்தசாரதி

யாழ்ப்பாணத்தில் நீர்வேலி என்னும் இடத்தில் உள்ள இராசேந்திர குருக்கள் என்பவர் வீட்டில் இவர் தங்குவார். முப்பது மைல் தூரமானாலும் அங்கிருந்தே காரில் போய்ப் பேசி வருவார். அரசாங்க உத்தியோகத்தில் இருந்த முத்துவேல் என்பவர் தம் காரில் அழைத்துக் கொண்டு செல்வார். அவரே காரை ஒட்டிச் செல்வார்."உங்களுக்குக் கார் ஒட்டும் சாரதியாக நான் இருக்கிறது என் பாக்கியம்" என்று மகிழ்ச்சியுடன் அவர் சொல்வார். "கார் ஒட்டுகிறவர் பெரியவராகவும் இருக்கலாம். நீங்கள் கார் ஒட்டுவது என் பாக்கியம் என்று நான் சொல்கிறேன்" என்றார். இவர். "அது எப்படி?" என்று அவர் கேட்டார். "பார்த்தனாகிய அர்ச்சுனனுக்குக் கண்ணன் காரை ஒட்டினான். அவன் பெரியவன் அல்லவா? பார்த்தசாரதி என்று அவனுக்குப் பெயர் இருக்கிறதே!" என்றார் இவர். "நான் கண்ணன் ஆவேனா?" என்று கேட்டார் முத்துவேல். "அந்தப்