பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 73

விடுங்கள்" என்றார்."நான் அதைச் சாப்பிடுவது இல்லை" என்று இவர் சொன்னபோது மற்றவர்கள் குபிர் என்று சிரித்து விட்டார்கள்.

பாடும் பாட்டு

அருணகிரிநாதர் விழாவில் பேசியபோது இவர் சொன்னது: -

அருணகிரிநாதரைப் போன்றவர்களும் பாடியிருக் கிறார்கள், என்னைப் போன்றவர்களும் பாடுகிறார்கள். அவர்கள் பாடுவது புளியேப்பம் போன்றது. நாங்கள் பாடுவது பசி ஏப்பம் போன்றது. அவர்கள் எல்லாரும் பாடும் பாட்டைப் பாடுகிறார்கள். நாங்களோ நாங்கள் படும் பாட்டைப் பாடுகின்றோம். இரண்டும் ஒன்றாகுமா? -

தேவ சேனாபதி

தெய்வயானை திருமணத்தைப்பற்றிச் சொற்பொழி வாற்றியபோது இவர் விளக்கியது: -

சூரசங்காரம் ஆனபிறகு இந்திரனுக்கு முடி

சூட்டினான் முருகன். தேவர்களெல்லாம் பழைய வாழ்வைப் பெற்றார்கள். இந்திரன் மிக்க நன்றியறிவுடன் முருகனை வணங்கி விண்ணப்பித்துக் கொண்டான்: "எம்பெருமானே! நாங்கள் அகங்

காரத்தால் தலைதருக்கி நின்றோம். சூரனால் அந்த அகங்காரம் போயிற்று, தலைக் குனிவு உண்டாயிற்று. நீ பெருங்கருணையினால் போர் செய்து சூரன் முதலியோரை அழித்தாய், தேவர் படைகளுக்குத் தலைவனாக, தேவ சேனாபதியாக இருந்து போரில்