உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

மாசம்பத்து

மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களிடம் தமிழ் பயில்வதற்கு, கி.வா.ஜ. 1987ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். 1928ஆம் ஆண்டு முதல் முதலாக ஐயரவர்களுடன் திருப்பனந்தாளுக்குப் போயிருந்தார். அங்குள்ள காசி மடாலயத்துத் தலைவரிடம் ஐயரவர்கள் இவரை அறிமுகப்படுத்தி, "இவர் ஆசு கவி; சமஸ்யை கொடுத்தால் உடனே பாடி முடிப்பார்" என்றார்கள். அப்போது அங்கே மடாதிப்தியாக இருந்தவர் ரீலழர் சொக்கலிங்கத்தம்பிரான் சுவாமிகள். அவர் ஐயரவர்களிடம் தமிழ் பயின்றவர். அவர் கி.வா.ஜ.வுக்கு ஒர் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார். உடனே இவர் வெண்பாவை இயற்றிச் சொன்னார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த மடாதிபதியவர்கள், "என்ன என்ன படிக்கிறாய்?" என்று விசாரித்தார். பிறகு மடத்துக் காரியஸ்தரிடம் சொல்லி ரூ.120 கொண்டு வரச் சொன்னார். அதை இவரிடம் கொடுத்து, "மாதம் பத்து ரூபாய் வீதம் வைத்துக் கொள்க. ஒவ்வோராண்டும் இத்தொகை கிடைக்கும்" என்றார்.