பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 74

விழாத் தலைவர்

டில்லியில் அருணகிரிநாதர் ஆறாம் நூற்றாண்டு விழாவில் இவர் பேசியபோது சொன்னது:

இன்றைய விழாவுக்குத் தலைவர் அருணகிரிநாதர். எத்தனையோ பேருக்கு நாம் விழா எடுக்கிறோம். சில விழாவின் தலைவர்கள் சில காலத்துக்கே தலைவர்களாக இருப்பார்கள்; பிறகு விழுந்து விடுவார்கள். அப்பால் அவருக்கு விழா நடத்த மாட்டார்கள். அருணகிரிநாதர் அப்படி அல்ல. அவர் என்றும் விழாத் தலைவர். அறுநூறு ஆண்டாகியும் அவருக்கு விழா எடுக்கிறோம். இன்னும் எடுத்துக் கொண்டே இருப்போம்.

கசக்கும் இலை

இவருக்குப் பல மூலிகைகள் தெரியும். உணவில் தக்க கீரைகளையும் மூலிகைகளையும் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் இருக்கலாம் என்று சொல்வார். பர்மாவுக்குப் போயிருந்தபோது அன்பர்கள் சிவத்தவம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒரு குன்றின்மேல் முருகன் கோயில் இருக்கிறது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பர்மியர்களாகிய பெளத்தர்கள் ஆகிய யாவரும் அங்கே சென்று வழிபடுகிறார்கள். குன்றின்மேல் ஏறி முருகனைத் தரிசனம் செய்து விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள். . . -

அங்கே அடிவாரத்தில் ஒரு மடம் இருக்கிறது. அங்கே சிறிது தங்கி இளநீர், பழம் முதலியன உண்டார்கள். நிறையச் செடி கொடிகள், மூலிகைகள் அங்கே இருந்தன. இவர் அங்கிருந்த குன்றிமணிக் கொடியில் உள்ள இலைகளை உருவி ஒர் அன்பரிடம் கொடுத்து, "இதை உண்ணுங்கள்; இனிக்கும்" என்றார். அந்த அன்பர்