பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 . சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

உண்டு, "ஆம், இனிக்கிறது" என்றார். குன்றிமணி இலைக்குள்ள இயல்பான சுவை அது. உடனே இவர் ஒரு வேடிக்கை செய்தார். "நீங்கள் அதிலிருந்து இன்னும் இலையைப் பறித்து வாருங்கள். அவற்றையே கசக்கும் இலை ஆக்குகிறேன்" என்றார். அன்பர் இலைகளைப் பறித்து இவர் கையில் கொடுத்தார். எல்லாரும் ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இவர் அந்த இலைகளை இரண்டு கையிலும் வைத்துப் பிசைந்து கசக்கினார். "இப்போது இது நான் கசக்கும் இலை ஆகி விட்டதல்லவா?" என்றார். -

வயிற்றில் பாலை வார்த்தார்

வெளியூர் ஒன்றில் இவருடைய நெடுங்கால நண்பர் ஒருவர் இருந்தார். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவர் வீட்டுக்குப் போனார். "அவர் ஊருக்குப் போயிருப்பதாகக் கேள்வியுற்றேன்" என்று வழியில் ஒரு நண்பர் சொன்னார். இருந்தாலும் போய்ப் பார்க்கலாம் என்று அவர் வீட்டை அடைந்தார். அந்த நண்பர் வீட்டில் இருந்தார். இவரைக் கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பால் கொடுத்தார். அதை அருந்திவிட்டு இவர் அருகிலிருந்த மற்றொரு நண்பரிடம், "இவரை எங்கே காண முடியாதோ என்று கவலைப்பட்டேன். நல்லவேளை! இருந்தார். என் வயிற்றில் பாலை வார்த்தார்" என்று கூறி மகிழ்ந்தார்.

கலையாமகள்

தினமணி கதிரில் அன்பர்கள் இவரைக் கேட்ட கேள்விகளுக்குரிய விடைகளை எழுதி வெளியிட்டார். ஒர் அன்பர், "கலைமகள் நேரில் பிரத்தியட்சமானால் அவளுடன் சிலேடையாகச் சொல்ல வேண்டுமானால், என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டிருந்தார். இவர்,