பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

பாவக்காய்

வீட்டில் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். "இன்று பாவக்காய் வாங்கி வரட்டுமா? வேறு ஏதாவது வேணுமா?" என்று கணவர் கேட்டார். "பாவக்காய் வாங்கி வந்து புண்ணியம் இல்லை. பிள்ளைங்க விரலால் கூடத் தொடமாட்டேங்கிறாங்க" என்றாள் மனைவி. அருகிலிருந்த இவர், "பாவக்காயில் புண்ணியம் ஏது? பாவந்தானே?" என்றார்.

காத்துக் கொண்டு

ஒர் அன்பரைப் பார்க்க இவர் சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லை. உள்ளே புழுக்கமாக இருந்தது. வெளியிலே காற்றாட இருக்கலாம் என்று வாசலில் வந்து நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த நண்பர் வந்து விட்டார். "ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உள்ளே உட்காரக் கூடாதோ?" என்று கேட்டார். இவர், "உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே காத்துக் கொண்டு நிற்கிறேன்" என்றார்.

(காத்துக் கொண்டு, காற்றுக் கொண்டு)

தண்ணியும் கிண்ணியும்

வெளியூரில் அன்பர் வீட்டில் இவர் தங்கினார். இரவு இவர் படுக்க வசதிகளைச் செய்து கொடுத்த அன்பர், "தண்ணி கிண்ணி வேண்டுமா?" என்று கேட்டார். -