உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 78

இவர்: இப்போது தண்ணி மட்டும் போதும்; காலையில் தண்ணியும் வேணும்; கிண்ணியும் வேணும்.

அன்பர்: ஏன்?

இவர்: காலையில் கூடிவரம் செய்து கொள்ள வேண்டும், -

கலை வளர்கிறது

ஒரு சொற்பொழிவில் இவர் சொன்னது:

இப்பொழுதெல்லாம் கலையின் இலட்சியம் இன்னதென்பதையே பெரும்பாலும் மறந்து விட்டார்கள். கலை வளர்கிறது என்கிறார்கள், கலையில் முதலில் ஒழுக்கம் கொலை செய்யப்படுகிறது. கலைக்குக் கொம்பும் காலும் முளைத்து வளர்கிறது.

(கொம்பும் காலும் முளைத்த கலை, கொலை.)

நாகராஜன்

சுதேசமித்திரனில் நாக ராஜராவ் என்ற போட்டோக் கலைஞர் இருந்தார். நன்றாகப் படம் எடுப்பார். அவர் அருகில் இருந்தபோது மற்றொரு நண்பரிடம் இவர் சொன் னார். "இரண்டு நாகராஜாக் கள் படம் எடுப்பார்கள். மற்றொருவர் படம் எடுத்தால் எல்லாரும் அஞ்சி ஒடுவார்கள். இவர் படம் எடுத்தால் எல்லாரும் வந்து கூடுவார்கள்."