பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 80

நன்றாகப் பழகினவர். ஆதலின் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறவர்."கொஞ்சம் தான் போடுங்கள்" என்றார். இவர் உடனே, "கேட்டா போடுவார்கள்? தானாகப் போட வேண்டாம்?" என்றார்.

பிரதி உபகாரம்

ஒர் அன்பர் இவர் எழுதிய நூல் ஒன்றைக் கேட்டார். இவர் அதை அன்பளிப்பாக அவருக்கு வழங்கினார். "நீங்கள் இதற்கு விலை தர வேண்டாம். நீங்கள் உபகாரம் செய்யாமலே இந்தப் பிரதி உபகாரம் செய்கிறேன்" என்று கொடுத்தார்.

உயர்த்தி

இவருடைய நண்பர் ஒருவருடைய பெண் நல்ல go uuJTu DtT&5 இருந்தாள்.

நண்பர் அவளுக்குத் திரு மணம் செய்வதைப் பற்றிக் கவலைப்பட்டார். "இவள் உயரத்துக்கு மேலே உயர மான பிள்ளையைப் பார்க்க வேண்டுமே!" என்றார். உடனே இவர், "உங்கள் பெண் ஒசத்தி (உயர்த்தி); அவளுக்கென ஒசத்தி'யான மாப்பிள்ளை நிச்சயமாகக் கின்டப்பான்" என்றார். (ஒசத்தி உயரம், மேலான சிறப்பு).