பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 2

அதை வாங்கிக் கொண்ட இவர்,"மாசம் பத்தா? மா சம்பத்து அல்லவா?" என்றார். (மா சம்பத்து - பெரிய செல்வம்)

தையற் யந்திரம்.

உஷா தையல் யந்திரத்தின் விளம்பரத்தை எங்கும் ஒட்டியிருந்தார்கள். ஒரு பெண் அந்த யந்திரத்தின் முன் அமர்ந்து தைப்பது போலப் பெரிய வண்ணப் படம் போட்ட சுவரொட்டி கள் எங்கும் காணப்பட்டன. ஒரு நண்பர், "அந்தச் சுரொட்டி யைப் பார்த்தீர்களா ? எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று இவரிடம் சொன்னார். தையல் யந்திரம் என்பதற்கு ஏற்ற பொருளை அறிந்து படம் எழுதியிருக்கிறார்கள்!" என்றார் இவர்.

(தையல்- தைத்தல், பெண்).

ങു, ഞു.

பையன் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று தந்தையை நச்சரித்துக் கொண்டிருந்தான். "தை பிறக்கட்டும்; வாங்கித் தருகிறேன் என்று தகப்ட்னார் சொல்லியிருந்தார். தை மாதம் பிறந்து விட்டது. அவரைப் பார்க்க இவர் போயிருந்தபோது பையன் தந்தையிடம், "தை மாதம் பிறந்து விட்டதே!" என்று முனகினான். "என்னடா குதிக்கிறாய்? பணம் கண்டு பிடித்தல்லவா வாங்க வேண்டும்?" என்றார் தந்தை.