உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

கொண்டிருந்தார். அப்போது இவர் இருமினார். "இருமல் போலிருக்கிறது" என்று வந்த அன்பர் கேட்டார். "ஆமாம்; நான் இடையில் ஒரு கதர் வேட்டி, மேலே ஒரு கதர்த் துண்டு, ஆக இரு கதர் அணிகிறவன். மல்ல்ே அணிவதில்லை. எனக்கு இருமல் வந்திருக்கிறது" என்று இவர் விடை பகர்ந்தார்.

தலையைக் காட்டிவிட்டு

பெங்களூரில் அருணகிரிநாதர் ஆறாவது நூற்றாண்டு விழாவுக்குப் போயிருந்தார். இவர். அங்கே வையாளிக்காவலில் இவருடைய அன்பர் இஞ்சினியர் திரு. சங்கர் சாஸ்திரியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு உடல் நலம் சரி இல்லை. போன அன்று இவருக்குப் பேச்சு இல்லை. ஆகையால் படுத்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார். சங்கர் சாஸ்திரியும் அவர் மனைவியும் இவரிடம் சொந்தப் பிள்ளைகளை விட அன்பாகப் பழகுகிறவர்கள். இவருக்கு வேண்டிய வசதியை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இவர் சங்கர் சாஸ்திரியைப் பார்த்து, "இன்றைக்கு நீங்கள் ஆபீஸுக்குப் போக வேண்டும் அல்லவா?" என்று கேட்டார். அவர், "இடையில் கொஞ்ச நேரம் போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவேன். அது போதும்" என்றார். "உங்கள் ஆபீஸ் என்ன சலூனா?" என்று கேட்டபோது சங்கர் சாஸ்திரி, "இன்றைக்கு முதல் ஜோக் கிடைத்து விட்டது" என்று கிளுகிளுத்தார்.

'கால்கட்டு

அவனுக்குப் பதினாறு வயது இருக்கும். காலில் காயம் பட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.