பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

"இதற்கு மணிக்கட்டு என்று பெயர் வைத்திருக்கிறார்களே. இங்கே தானே ரிஸ்ட்வாட்சைக் கட்டுகிறோம்? யாழ்ப்பாணத்தில் கடிகாரத்தை

மணிக்கூடு என்று சொல்வார்கள். அதைக் கட்டுவதால்

மணிக்கட்டு என்ற பெயர் இதற்குப் பொருத்தமாக

இருக்கிறது."

மாதுறவு

ஒரு துறவியைப் பற்றி அன்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் ஒழுக்கம் கெட்டு வாழ்வதையும் பல பெண்களோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துச் சொல்லி அங்கலாய்த்தார்கள். "முன்பெல்லாம் இப்படி இல்லை. இப்போதுதான் கெட்டுப் போய் விட்டார்" என்றார்கள்.

அங்கே இருந்த இவர், "முன்பு துறவு இருந்தது: இப்போது மாதுறவு இருக்கிறது; அவ்வளவுதானே?" என்றார். (மாதுறவு - பெரிய துறவு, மாது உறவு).

பொடி வைக்கவா?

இவருக்கு இட்டிலியைப் பரிமாறிய அன்பர், "இதற்குப் பொடி வைக்கவா? சட்டினி போடவா?" என்றார். "பொடி வைக்க வேண்டாம்; பேச்சில்ே வைத்துக்கொள்ளுங்கள். இப்போது சட்டினியே போதும் என்று இவர் சொன்னார். (பொடி வைத்தல்மிளகாய்ப் பொடி வைத்தல், நயம் வைத்தல்.)

வாயில் காவலன்

இவரை ஒரு கூட்டத்துக்குத் தலைமை தாங்கும்படி ஒர் அன்பர் வந்து கேட்டார்.