பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 86

"நான் சும்மா வந்து பேசிவிட்டுப் போகிறேன்."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"தலைமை தாங்குவதும் ஒன்றுதான்: கேட்கீப்பர் வேலையும் ஒன்றுதான்."

"என்ன, அப்படிச் சொல்லிவிட்டீர்கள்?"

"வாயில் காவலன் எல்லாருக்கும் முன்னே வந்து வாயிலைத் திறந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். எல்லாரும் வந்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்யும் வரையில் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லாரும் புறப்பட்டுப் போன பிறகு வாயிலை மூட வேண்டும். தலைவன் வேலையும் இதுதான். எல்லாருக்கும் முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும், பேசுகிறவர்கள் ஒவ்வொருவராக வருவார்கள். பேசுவார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்க வேண்டும். எல்லாரும் பேசின பிறகு சபையினரும் எழுந்து விடுவார்கள். அப்போது கடைசியாக வாய் திறந்து பின்னுரை பேச வேண்டும்."

தேன் குழல்

ஒரு வீட்டில் சிற்றுண்டிக்கு ஜாங்கிரியும் தேங்குழலும் வைத்தார்கள். இவர் ஜாங்கிரியைச் சுட்டிக்காட்டி, "இது தான் தேன் குழல் மற்றது தேங்குழல்" என்றார். "அது

எப்படித் தேன் குழலாகும்? இதற்குத்தானே அந்தப் பேர்?" என்று ஒருவர் கேட்டார்.