பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ Ջ0

விழாவைத் திறந்து வைத்தார். இவர் வரவேற்றுப் பேசினார்; அப்போது சொன்னது: -

கம்பன் சோழ மன்னர் காலத்தில் வாழ்ந்தவன். ஆனால் சோழ மன்னர் அவனைப் பாராட்டி ஆதரித்ததாகத் தெரியவில்லை. சடையப்ப வள்ளல் கம்பனை வளர்த்து ஆளாக்கிப் பாடச் செய்தவர். எத்தனையோ கவிஞர்களுக்குச் சிறப்பளித்து வாழ்வளித்த சோழகுலம், கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பனைப் பாராட்டத் தவறிவிட்டது. பிற்காலச் சோழ மன்னர்களில் மிகப்புகழ் படைத்தவர் கங்கைகொண்ட சோழர் என்ற சிறப்பைப் பெற்ற இராசேந்திர சோழ சக்கரவர்த்தி. கம்பனுக்குத் தம் குலம் செய்ய மறந்த சிறப்பைத் தாமாவது செய்யலாம் என்று கருதி அவர் வந்ததுபோல இருக்கிறது, இந்தியச் சக்கரவர்த்தியைப் போன்ற நம் ராஷ்டிரபதி இங்கே எழுந்தருளியது. அந்தச் சோழ மன்னரும் இராசேந்திரர், இவரும் இராசேந்திரர் அல்லவா? - -

கடைசிப் பந்தி

இவரும் இவர் தம்பி பூர் கி. வா. பாலசுப்பிர மணியனும் முன்பு ஒன்றாய் இருந்து வந்தார்கள். அவர் வியாபாரம் செய்கிறார். அவர் கடையில் உள்ள இருவர் இவர் வீட்டிலேயே உண்டு வந்தனர். கடையை மூடிக் கொண்டு வர இரவு 10-30க்கு மேல் ஆகும்.

இவர் வீட்டுக்கு இவருடைய நண்பர் ஒருவர் ...வெளியூரிலிருந்து வந்தார். இவரது வீட்டில் தங்கிப் பகலுணவு உண்டார். "வெளியில் போய்ப் பல நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றார்.