பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 92

அசட்டை

பனிக்காலம். இவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் உடம்பைத் திறந்து போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். இவர் அவரிடம் சொன்னார்: "குளிர்காலம். ஏதாவது கம்பளிச் சட்டை போட்டுக் கொள்ளுங்கள். அசட்டையாய் இருக்கக்கூடாது. பிறகு ஜலதோஷம், ஜூரம் எல்லாம் வந்துவிடும்". (அசட்டைசட்டையின்றி இருத்தல்; அசிரத்தை கவனக்குறைவு).

ஜயம்

ஒரு நண்பருடைய வீட்டுக்கு இவர் சென்றபோது அவர் தம் மகளை அறிமுகப்படுத்தி இவரை வணங்கச் சொன்னார். "ஜயம்!" என்று அவளைத் தந்தையார் அழைத்தார்.

"உன் பெயர் ஜயலக்ஷ்மியா" என்று இவர் கேட்டார். "ஆம்; ஜயம் என்று கூப்பிடுவார்கள்" என்றாள் அந்தப்பெண்.

"எங்கே போனாலும் உனக்கு ஜயந்தான். உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறவனுக்கும் ஜயமே கிடைக்கும்" என்றார்,

"நல்ல ஆசீர்வுாதம்" என்று பெண்ணின் தந்தையார் மனமகிழ்ந்தார்.