பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி, சுந்தரம்

99


சித்ரா : அவ அம்மாவைப் பார்க்கப் போனவ அங்கேயே

இருந்துட்டா! அப்பவே சொன்னேன். போகாதே
பேசாதேன்னு தலைகீழே நின்னேன்! பாட்டி
வார்த்தையை மீறிப்போனா. மாதவி என்னமோ
சொல்லி பொண்ணு மனசை மாத்திட்டா
போலிருக்குங்க! ஐயோ! இளவரசே, இனிமே
எப்படி உயிர் வாழ்வேனுங்க?

உதய : கவலை வேண்டாம்!

சித்ரா : எனக்காக நான் கவலைப்படலீங்க! பாவம் நீங்க

அவமேலே உயிரையே வெச்சிருந்தீங்களே!
உங்களை நெனைச்சா என் உடம்பெல்லாம்
எரியுதுங்க! நீங்க உடனே போய் அழைக்காட்டா
அவ சன்யாசியாயிடுவாங்க அப்புறம் நீங்களும்
சன்யாசி ஆகணுங்க!

உதய : என்ன சந்யாசியாவதா? என் மேகலையா?

பெரியதொரு சரித்திரத்தையே உருவாக்கப் பிறந்த
பைந்தமிழ்ப் பாவை! என் பிரேமைப் புதுமலர்,
பக்தியெனும் பாலைவனத்தில் பட்டு, சருகாக
நான் சம்மதிக்க மாட்டேன்! பளிங்குச்சிலை,
பாறையிலே மோதித் தூளாகப் பார்த்துக்
கொண்டிருப்பது அநியாயம்! அக்கிரமம்! இதோ
போகிறேன். வரும்போது இருவரும் வருவோம்.

(உதயகுமாரன் வேகமாகப் போகிறான்)

சித்ரா : மனுசன் போற வேகத்தைப் பார்த்தா...

மாமா : தடுக்கி விழுந்திடாமப் போகணும். பார்க்கலாம்.

உம். அம்மா மாதவி கல்யாணம் ஆகியும் சன்
யாசி... மகள் ::கல்யாணம் ஆகாமலே சன்யாசி
யாயிட்டா. பார்க்கலாம்! ஏ? உலகமே? நீயே ஒரு
சன்யாசி ஆயிட்டா என்ன?


(காட்சி - 9 (a) முடிவு)