பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சிரிப்பதிகாரம்



கதை ஒரு களங்கமாக இருக்க நான் விரும்ப
வில்லை.

உதய :மேகலா வேண்டாம் விபரீதம் விளைந்து விடும்;

மேகலை என்ற பெண் தன்னை நிராகரித்த
தால் உதயகுமாரன் என்ற இளவரசன் தற்
கொலை செய்து கொண்டு, பேயாக அலைந்தான்
என்ற தீராத பழியை நீ தேடிக் கொள்ள
வேண்டாம்!

மேக :ஆண்டவா! இதென்ன சோதனை!

உதய :அன்பின் சாதனை சக்தி பெற்று விட்டால்,

வாழ்வின் சோதனைக்கு அஞ்சாது மேகலா!
ஒன்று நீ அன்றி மரணம்!

மேக :தற்கொலை கோழைகளின் சரணாகதி அறியா

மல் செய்த முடிவுகளை மறந்து விடுங்கள்.
மண்ணிலே தோன்றிய மலர்ச்செடி, மண்ணுக்கே
உரமாவது போல், நம் உள்ளத்தின் எண்ணங்கள்
எல்லாம் தோன்றிய இடத்திலேயே மறைந்து
போகட்டும்! நமது இரண்டுயிர்களும் ஒன்றான
இன்ப மயக்கத்தில் எதிர்காலம் ஒன்றிருப்பதையே
மறந்து விட்டோம்! உண்மை அன்பு உறுதி
யானால் உடலை விரும்பாது அரசே! உயிரைத்
தான் நேசிக்கும் உள்ளத்தை உறுதி செய்து
கொள்ளுங்கள். உடனே போய் விடுங்கள்.
உலகம் சிரிக்குமுன் போய் விடுங்கள்.

உதய :ஒலமிடும் சாகரத்தின்முன் நின்று ஒட்டைச்

சங்கை ஊதுகிறாய்! பசியால் தத்தளிக்கும்
மனிதனுக்குப் பழைய தத்துவங்கள் பயன்படாது
கண்ணே! பாய வந்த வேங்கையிடம் பொறு
மையை எதிர்பார்க்காதே மேகலா நடுங்கும் என்
உயிரை நாசமாக்கி விடாதே! கண்ணே வா
போகலாம். நீயா இப்படி இருப்பது? ஐயோ!
பார்க்கவே பரிதாபமாயிருக்கிறதே! புறப்படு