பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

103


::கண்ணே! அதோ பார் நட்சத்திரங்கள் நம்மைக்

கண்டு கண் சிமிட்டிக் கேலி செய்கின்றன.
வா கண்ணே! ஏழடுக்கு உப்பரிகையில் எழிலரசியாக
வீற்றிருப்பாய்! அங்கே தங்கப்படி கட்டிய
பன்னிர்க் குளமே நிர்மாணிப்பேன்! அதில்
மின்னும் அன்னம்போல் நீந்தி, உன் பொன்னு
டல் இன்பமுறும் சீனத்துச் சல்லாக்கள் உன்
செந்தாமரை மேனியில் சிலுசிலுக்கும்...!
யவனத்துச் சிற்பங்கள் உன் காட்சிக்கு மகிழ்
ஆட்டும்! நம் நாட்டு நீலப்பட்டாடைகள் உன்
பருவ மேனியில் பளபளக்கும் எனக்காகவே
நீ பிறந்தாய்! உனக்காகவே நான் வளர்ந்தேன்.


மேக :உஹீம். எல்லாம் வீண் கனவு என்னைப் பார்த்த

மறுகணமே வேந்தர் உங்களை நாடு கடத்தச்
சொல்லுவார்! -


உதய :சந்தோஷமாக ஏற்பேன். காதலுக்காகச் சோழ

சாம்ராஜ்யத்தையே இழக்கத் துணிந்த பெருமை
எனக்கு வரும்! நாம் தம்பதிகளாவோம். நானில
மெங்கும் சுற்றுவோம். நல்ல கலை வளர்ப்போம்.
வா கண்ணே! .

மேக :முடியாது அரசே முடிவு செய்து விட்டேன்!

உதய :ஐயோ மேகலா புது வீட்டின் முதல் வாசலையே

முடிவிட்டதுபோல், பருவத்தின் துவக்கத்திலேயே
துறவியாவது இயலாத காரியம்! இதோ பார்!
என் பொறுமை மீறுமுன் நீயாகவே புறப்பட்டு
விடு. இல்லையேல் என் செல்வத்தை எப்படிக்
கொண்டு போக வேண்டுமென்று எனக்குத்
தெரியும் புறப்படு மேகலா.

மேக :மறந்து விடுங்கள் அரசே!


உதய :மேகலா

மேக :கோபமா