பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அறlெ

மேக

அறவ

சிரிப்பதிகாரம்

ஏனில்லை? துணிந்து நில் மகளே! நமது பகவான் புத்த தேவர், அன்பின் மனைவி, அருமைச் சிறு குழந்தை, அரண்மனைச் சுகபோகம் எல்லா வற்றையும் துரும்பெனத் துறந்துவிட்டுக் கானகம் சென்று கடுந்தவம் செய்ததால் தானே, போதி சத்வர் ஆனார்! புவியெல்லாம் வசப்படுத்தினார்!

அவர்கள் எல்லாம் ஆண் பிறவிகள்! நான் பெண் பேதை!

ஞானப் பாதையில் ஆண் பெண் என்ற பேதமில்லை தாயே! பிணி தீர்க்கும் மருந்துக்கு அதன் பெருமை தெரிவதில்லை! ன் பெருமை உனக்குத் தெரியவில்லை. நம்பு மகளே! நீ உயிர்களை ரட்சிக்கப் பிறந்தவள்: ஆருயிர்த் துயர் நீக்கும் அமுத கடாட்சம் பெறப் போகிறாய்! உன்னைப் பெறாமல் பெற்ற அன்னை கண்ணகி தேவி கற்பின் தெய்வமானாள்! நீ கன்னித் தேவதையாகக் கவலையை நீக்கப் போகிறாய்! மனமிருந்தால் மார்க்கம் உண்டு! இதுவே ஞான விருட்சத்தின் முதல் வித்து. இதைப் பயிர்செய் மகளே! பலன் கிடைக்கும்! கீழ்த் திசையில் கதிரவன் உதயமாவது போல், உன் இதயத்தில்

தவக்கனல் உதயமாகும்! அப்போது ஆசா

பாசங்கள் என்ற சருகுகள் எல்லாம் எரிந்து சாம்பலாகும் உடலின் அவஸ்தைகள் எல்லாம் ஒளியின் முன் பணியாக மறைந்து விடும். உறுதி கொள் மகளே! உண்மை உனக்கே தெரியும்!

(காசி-10 (a) முடிவு