பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

※——————————————————————————————————109

காட்சி - 11
இடம்: வேறு ஒரு சோலை


உதய : கலைமணி! பெண்களை ஏன் படைத்தான்?

கலை : அது கடவுளைத்தான் கேக்கனும்:

உதய : கடவுளா படைத்தான்?

கலை : சேச்சே! கட்டாயம் அவரிந்த காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்!

உதய : பின் யார் செய்தது?

கலை : காதல் என்கிற பிசாசு செஞ்ச பொம்மைக்குத் தான் பொம்பளைன்னு பேரு!

உதய : பொய் சொல்லுகிறாய்!

கலை : போப்பா! ரொம்ப பெரியவங்களே சொல்றாங்க!

உதய : ஆனால், என் மேகலை அப்படியல்ல!

கலை : ஒவ்வொருத்தனும் அவனுக்குப் புடிச்ச பொண்ணைப் பத்தி இப்படித்தான் சொல்றது வழக்கம்.

உதய : பாசமுடன் பேசினாள்!

கலை : பாட்டி சொல்லிக் கொடுத்திருப்பா!

உதய : தென்றல் போல் ஆடினாள்.

கலை : தாயைப் போலப் பொண்ணு. அசைந்து ஆடினாள்!

கலை : கொடி ஆடுவது இயற்கை கோல மரம் ஆடக் கூடாது. ஆடினால் வேரோடு விழும்.