பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 ——————————————————————————————————※

சிரிப்பதிகாரம்

உதய : அறிவற்றவனா நான்?

கலை : சே! அதை நானாகச் சொல்ல மாட்டேன்! அறிவை அடகு வெச்சிட்டே

உதய : அறிவைப் பற்றிப் பேசாதே! அவளைப் பற்றிப் பேசு நண்பா!

கலை : பிரயோசனம்.?

உதய : ஊசலாடும் என் உயிருக்கு ஒரு ஆறுதல்!

கலை : அட போப்பா ஊசிப்போன பலகாரம், ஒடஞ்சி போன கண்ணாடி, இதை

எல்லாம் வூட்லே வைச்சிருக்கக் கூடாது. ஒடிபோன் பொம்பளையையும்
உடனே மறந்து உன் வேலையைக் கவனி!

உதய : மறப்பதா! முடியாது நண்பா! எந்த ஜென்மத்திலும் என் மேகலையை மறக்க ::முடியாது! வைரமணிச் சிரிப்பால் என் வாழ்வை அறுத்து விட்டாள் வீணை இசைக் ::குரலால் என் உயிரை வசமாக்கி விட்டாள்! கண் விழியின் இமையில் என்னைக் ::கருமையாய்த் தீட்டி விட்டாள்! பாட்டின்பச் சாட்டையிலே பம்பரமாய் ஆட்டி ::விட்டாள்! பாதச் சிலம்பொலியில் பரமபதம் காட்டி விட்டாள்.

கலை : பேச்சு அதிகமானால் பைத்தியத்தின் ஆரம்பம்!

உதய : ஆம்! பைத்தியம் தான் நண்பா மேகலையின் அழகின் முன் நான் ::பைத்தியக்காரன் தான்! பைத்தியக்காரன்! ஹஹஹா... (சிரிப்பு) ஆசை என்ற ::அடிவானத்தைத் தேடி வேகமாக ஓடிக் கொண்டிருந்த என்னை, ஒரு நொடியில் தன் ::கடைக் கண்ணால், தடை செய்து, இதோ தொடுவானம், நான் இருக்கிறேன்! என்று ::ஆடி அசைந்தாள் காட்சி தந்து, கைகாட்டி அழைத்த வளை நேசக்கரம் நீட்டி, ::நெருங்கிச் சென்றவுடன், காரிருளில் மின்னல் போல், கடும் பாலைக்