பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிரிப்பதிகாரம்


வாழும் தமிழன்னைக்கு, இந்த ஏழை படைக்கும் இந்தச் சுவையற்ற பொருளும் ஒத்துக்கொள்ளும் என்றே கருதுகிறேன்.

இதன் சுவையில் ஏதேனும் குறையிருந்தால் அதற்கு நானேதான் பொறுப்பாளி என்பதை நான் பலபேருக்கு முன் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இல்லாவிடில் எனது வாழ்க்கைத் துணைவியும் பகைவியுமான சகதர்மிணி சண்டைக்கு வந்துவிடுவாள். ஆமாம் எங்கள் வீட்டில் ஏதாவது நல்லது வந்தால் அது அவளுக்குச் சொந்தம். கஷ்டம் வந்தால் அது என் தலையிலே விழ வேண்டும். இது தான் கலியாண மந்திரத்தின் கடைசி இரகசியம் என்பதை எப்படியோ தெரிந்து வைத்துள்ள செந்தமிழ்ப் பத்தினி அவள்.

அதனால் தான் சுண்டல், வடை, சுக்குக் காபி இவைகளைப் போடத் தெரியாமல், கடந்த இருபது ஆண்டு காலமாக ஹார்லிக்ஸ், ஒவல்டின் பிஸ்கட்டுகளைக் கொடுத்தே நவராத்திரிக் கொலுவுகளையும், புரட்டாசி சனிக்கிழமைகளையும் வெற்றிகரமாகக் கொண்டாடி, கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு சிறு பணத்தை நாசமாக்கி வரும் அதாவது பணத்தை தேசியமயமாக்கி வரும், அல்லது கேஷலிஸமாக்கி வரும், எனதருமை வாழ்க்கைத் துணைவி தான் இதில் இருக்கும் நல்ல சுவைகளுக்கெல்லாம் பொறுப்பு என்பதை முன்கூட்டியே சொல்லி விடுவது நல்லது.

இந்த இலக்கியப் பணியாரத்தில் எந்தச் சுவை எப்படி இருந்தாலும், உப்புச் சுவை மட்டும் ஒரு சிறிதும் குறையாத என்பதை நீங்கள் தாராளமாக நம்பலாம். ஏனென்றால், என் மனைவிக்கு ரொம்பவும் தாராள மனசு, எதையும் குறைத்துக் கொடுக்கத் தெரியாது. பாரி வள்ளலுக்கு அடுத்த சாரி வள்ளல் பரம்பரை. ஆகையால் அவள் தயவில் தயாரான இந்தச் சிரிப்பதிகாரப் பணியாரத்தில் உப்பு என்ற சுவைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் இருக்குமே தவிர, ஒரு போதும் குறையாது என்பதைப் பணிவன்போடு முதலிலேயே கூறிக்கொள்ள ஆசைப்