பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

எஸ்.டி சுந்தரம்:

பிடிச்சிருந்தது. மருந்து சாப்பிட்டேன், நல்லா ஆயிட்டேன் ஜாக்ரதை! உங்களுக்கு நோய் வராம உடம்பைக் காப்பாத்திக்கோங்க ஆமாம் சொல்லிட்டேன்! அப்புறம் உங்க இஷ்டம்!

ஒருவன்: சரிதான் போய்யா! பெரிய இவரு: பிரசங்கம்

பண்ண வந்துட்டாரு!

மற்றொருவன் : போறியா இல்லையா இப்போ?

சாது : தம்பி எனக்கு இதைப்போல உண்மையைச் சொல்றவன் இல்லாததால் தான் நான் ஊர் சுத்தி உடம்பைக் கெடுத்துக்கிட்டேன்! ஆகையினால் நானே கிளம்பிட்டேன் பிரசங்கத்துக்கு! நான் பெற்ற துன்பம் இந்த உலகம் பெறவேண்டாம்! நாகர்கள் கிட்டெ அகப்பட்டு கிட்டேன். காமத்தாலே கண் இழந்தேன். காசு சம்பாதிக்க கப்பலில் போனேன் - புயல் வந்தது. கப்பல் உடைந்தது. நரமாமிசம் திங்கற கூட்டத்திலே இருந்து தப்பி வந்தேன்.

மற்றொ: சரிதான் போடா.

சாம்பி : சாதுவா வா! போகலாம். பசங்க கல்லெடுத்து

அடிப்பாங்க போலிருக்கு!

சாது : பரவாயில்லை நண்பா! உலகில் பாவம் குறைய நான் பலியாகிறேன். தவறு செய்யாதவன் எவனோ, அவன் என் மீது கல் வீசட்டும்.

சாம்பி : அதெல்லாம் வேணாம்! ஆதிரை வருத்தப்படும். இதோ பாரு. உலகத்தைப்பத்தி நீ கவலைப் படாதே! எப்போ நீயே திருந்திட்டியோ அப்போ இந்த உலகமும் கட்டாயம் திருந்தும்! வா இப்டோ உடம்பைக் கெடுத்துக்காதே! வா டோவோம். -

சாது : அருமைப் பெருமக்களே! வருகிறேன்.