பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

11


படுகிறேன். இதைப் பொறுத்தமட்டில் அந்த உத்தமியை ஒரு உப்பு சத்யாக்கிரகி என்று போற்றிப் பாராட்டுவிழா கூட நடத்தலாம். போஸ்டர்கூடப் போடலாம்.

என்னவோ அய்யா! பொறுமைமிக்க தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சோதனையாக வருகிறது. இந்தச் சிரிப்பதிகாரப் பலகாரம் 'என்னய்யா இது. சிரிப்பதிகாரம் என்னும் இந்தப் புதுப் பலகாரத்தை தமிழ்த் தாய்க்குத் தானே படைக்கிறாய். அது நன்றாயிருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும்,’ என்று ஒரு வினாவைக் கேட்டு, இந்த அரிய முயற்சியின் அவசியத்தை நீங்கள் அலட்சியப்படுத்தி விடக் கூடாது என்று மிக மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர் எழுதுவது, சிரமப்படுவது, சாவது, அதற்குப் பின் வாழ்வது, எல்லாமே வாசகர்களாகிய உங்கள் சேமத்தை முன்னிட்டுத்தான் என்பதை, நீங்கள் நம்பியே தீரவேண்டும். ஆம். தமிழ்த் தாய்க்குப் படைக்கும் பலகாரங் களை எல்லாம் அந்தத் தமிழ்த்தாய் விசுவரூபமெடுத்து வந்து சாப்பிட்டு விடுவதில்லையே! தமிழ்த் தாயின் பெயரைச் சொல்லிவிட்டு, நாம் தானே எடுத்து முழுங்குகிறோம்!ஆதலால், தமிழ்த் தாயின் ஏஜெண்டுகளாக அதாவது போலீசுகளாக, பூலோகத்தில் அவதாரம் செய்து, இலக்கியப் பணியாரங்களை எல்லாம் ஜீரணம் செய்துவரும் வாசகப் பெருமக்களாகிய உங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தானே அவையடக்கம், அணிந்துரை என்ற முறைகளை ஆதியிலிருந்தே பெரியோர்கள் வைத்திருக் கிறார்கள்.

இல்லாவிட்டால் எதற்காக கதையைவிடப் பெரிதான முன்னுரை? அளவுக்கு மீறிய அணிந்துரை? அவசரமிக்க அறிவுரை? நூலைவிடப் பெரிய நுண்ணுரை? இப்படியாக எல்லாவித உரைகளையும் போட்டுப் பக்கங்களை நிரப்புகிறோம்.

‘உடலைவிடப் பெரிதான வயிறு முகத்தைவிட பெரிதான மீசை! பீரங்கியைவிடப் பெரிதான குண்டு! காதை