பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சிரிப்பதிகாரம்

காட்சி - 15 (a)

இடம் : ஒரு தோட்டம்

மேக

உதய

மேக

மேகலா மேகலா!

ஆ. இளவரசே!

நான் ஒரு பிச்சைக்காரன். மண்ணாள வேண்டிய வன் மண்பாண்டம் ஏந்தி வந்தேன். எங்கே அன்புப் பிச்சை கண்னே! கண்ணே! மேகலா பார் என் பஞ்சடைந்த கண்களை.

ஆ இளவரசே! - இல்லை. இன்று உன் காலடியில் கிடக்கும் ஒரு பிச்சைக்காரன் நான்! என் அலங்கோலத்தைப் பார் மேகலா! படபடக்கும் என் உயிரை நன்றாக உற்றுப்பார் மேகலா! உன் நினைவால் வற்றி, வாடி வதங்கி விட்ட எலும்புக் கூட்டுக்குள்ளே, அன்பெனும் பச்சைக்கிளி, சிறகொடிந்த வேதனை யால் துடிதுடிக்கும் பரிதாபத்தைப் பார் மேகலா பார்! உன் செம்மலர்ப் பார்வைக்காகச் சோழ சாம்ராச்சியத்தையே துச்சமாக எண்ணித் துறந்து விட்ட இந்த உண்மைத் துறவியைப் பார் மேகலா பார்! நம்மிலே யார் உண்மையான துறவி? உலகைக் கெடுக்கும் காவியுடையா? உயிரைக் கொல்லும் வைராக்யமா! அல்லது உயர்ந்த அன்புக்காக உலகையே துறந்த நானா! பேசு! மேகலா பேசு. ஏன் பேசவில்லை? பேசு மேகலா! பேசு பேசாத உன் மெளனம் என் மரண வேதனையாக முடிந்து விடும்!

இளவரசே பரிதாபப்படுகிறேன்! போன ஜன்மத்தில் முடியாத பாசம், இந்த ஜன்மத்திலும்