பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர்கள் ஜாக்கிரதை! (ஒரு சிறு நாடகம்)

காட்சி - 1

இடம் : கல்லூரிக்கு அருகே ஒரு சாலை

பாத்திரங்கள் : தலைவர் இட்லர்தாசன், பட்லர் நேசன், தலைவி

பட்டம்மாள் தேவி மற்றும் சில பரிதாபங்கள்

உள்ளே பல குரல் ஒலிகள்! வாழ்க வளமார் இட்லர் வானத்திலிருந்து வையகம் வந்த வாள்வலி இட்லர் வாழ்க! கள்தோன்றி கலயந் தோன்று முன்பே கண் சிவந்து, முன் தோன்றும் மூத்தபெரும் தலைவா! வாழ்க! விஸ்கி தோன்றி பிராந்தி தோன்றுமுன் பிஸ்கட் ஏந்தி மஸ்கடியார் போல் வாழ்ந்த மனிதா போற்றியே போற்றி, அடியே போற்றி!

இட்லர்தாசன் : நண்பா பட்லர் கேட்டாயா மக்கள்

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர்:

குரலை இம்முறை நான் எப்படியும் சரித்திர நாயகனாகியே தீரவேணும்.

அட என் அருமை இட்லர் அஞ்சாதே ஏற்கெனவே நீ நாயகன் தானடா!

எப்படி?

நீதான் வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கி றாயே! ஆகையால் நீதான் நாய்அகன்.

அதுவல்ல தம்பி! நான் பெரிய தலைவனா கனும்டா,

நீ இப்பவே பெரிய தலைவன்தானடா.

அப்படியா.