பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இட்லர் :

பட்டு

சிரிப்பதிகாரம்

உடைப்பவன், நல்லதொரு பைத்தியக்காரனே தவிர புத்திசாலி ஆகமாட்டான் கல்வி தரும் ஆசிரியரை எதிர்ப்பது குறும்புத்தனம், காவிரித் தோப்பிலே முளைத்த காளான்கள், பழ மரத்தின் உயரத்தை அளக்க முயன்றது போல், இந்த மகா புத்திசாலிகள் ஆசிரியர்களையே எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆலமரத்தில் வசிக்கும் வண்ணப் பசுங் கிளிகளுக்குத் தாலாட்டுப்

பாடுவதாக எண்ணி, நள்ளிரவில் வந்து அலறும்

ஆந்தைக் கூட்டம் போல, இந்த அதிமேதாவிகள் நமக்கு அறிவுரை புகல ஆரம்பித்து விட்டார்கள். பத்து வயதுக் குழந்தை பெற்ற தாய்க்கே பாடம் போதிப்பதைப் போன்ற வேடிக்கை ஏ மனிதா - நீ நல்ல குடும்பத்தில் பிறந்தவன். நாச வழியில் இறங்காதே! நாட்டுப் புறத்தை விட்டு நகரத்திற்கு வந்தது எதற்காக, கலைபல பயின்று, அறிவியலை ஆராய்ந்து வருங்கால நாட்டின் வாழ்வுக்கு அணி செய்ய வேண்டிய கோடிக்கணக்கானவர்களில் நீயும் ஒருவன். வீணாகப் பிஞ்சிலே வெம்பிக் காய்ந்துக் கருகி விடாதே மனிதா!

ஆ! ஆ! சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை மாமனாரை மயக்கும் மாப்பிள்ளை! மாமியாரை மடக்கும் பெண்பிள்ளை. தலை யாட்டும் தம்பிரான் பிள்ளை, அஞ்சி நடுங்கும் அணிப்பிள்ளை. கருநாகத்தைக் கடித்துவிட்டுக் கதறிச்சாகும் கீரிப்பிள்ளை - இந்த அப்பாவிப் பிள்ளைகளின் அனுதாபப் பட்டியலில் பட்டுவும் ஒருத்தி. இவள் பேச்சில் சோகப் பெருமூச்சைத் தவிர வேறு எந்தவித மாற்றத்தையாவது கண்ட துண்டா? இல்லை. காரணம் காண முடியாது. காண இயலாது. காணக் கூடாது.

சீ. கீரல் விழுந்த கிராமபோன் ப்ளேட் சொன்ன தையே சொல்லும் மேடைப் பிரசங்கி மோனை