பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :- - 157

இட்லர் :

பட்டு

இட்லர் :

எதுகைக்காகவே பேசும் மொழிச் சூதாடி! அழகுக்காகவே பேசும் அரசியல் கோமாளி! இந்தத் தகுதியைத் தவிர வேறெந்தத் தகுதியு மில்லாத இந்த மனிதன் மறுப்புப் பேசுகிறார்! தோழர்களே! பட்டு என்னை வெட்டிப் பேசுகிறாள். தேள் போல் கொட்டிப் பேசுகிறாள். மருட்சி கொண்ட மடமான் புரட்சிப் புலிமீது பாய்கிறது, அதை ரசிக்கிறீர்கள். காரணம், முடிவை அறிவீர்கள்! புலியின் மீசையை புல் லென்று எண்ணி மெல்ல வந்த இந்தப் புள்ளிச் சிறுமான் விளையாடுகிறது. புள்ளி மானின் இரை, புலிக்கு இனிக்குமாகையால், நானும் பட்டுவின் பேச்சைக் கேட்கிறேன். ஜசுகிரீம் மாதிரி ரசிக்கிறேன். அந்த ரசனையின் எல்லை யிலே சிரிக்கிறேன். ஆம் நான் ஒரு ரசிகன். அவள்தரும் நோஸ் கட்டுகளை யெல்லாம், பேஸ் (Face) கட்டுகளாக ஏற்றுக் கொள்ளுகிறேன். நீ பேசு பட்டு பேசு சீறிக் குமுறும் உன் சிங்காரப் பேச்சு, சினிமாக் கதாநாயகியின் சோகக் கட்டத்தைத் தவிர வேறெதையும் இதுவரையில் சித்தரிக்கவில்லையம்மா! பேச்சென்றால் பிரிய

மதிகம் எனக்கு, உன் கண்வெட்டுப்போலவே,

உன் சொல்வெட்டும், பொன் வெட்டிப் பாய் கிறது! உம் பேசு தோழி! பேசு உம் வீசு உன் புலமையை! அத்தனையும் காசு!

சே! சிறங்கு பிடித்தவன் தலையைக் குரங்கு வந்து சொறிவதால் புண் அதிகமாகுமே தவிர, குறையாது! இவனது மனக்குரங்கு, உங்களையும் மகாபுத்திசாலிகளாக்கப் பார்க்கிறது. அது நடக்க இடம் கொடுக்காதீர்கள். எச்சரிக்கை

வடிட்அப் பட்டு! என் அடிப்படை உரிமையை அவமதிக்கிறாய்! பரம்பரைப் பெருமையைப் பயமுறுத்துகிறாய்! ஜாக்கிரதை இப்படிப் பேசி